Categories
உலக செய்திகள்

பிரேசிலில் ஒரே நாளில் 34,407 நபர்களுக்கு கொரோனா தொற்று.. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!!

பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதனால் பிரேசிலில் மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,10,69,017 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டில் தற்போதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 5,89,240 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம், 800 நபர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Categories

Tech |