பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது.
பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் எந்தெந்த இயந்திரங்களை மீனவர்கள் கொண்டுசெல்லலாம் என்பது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, இந்த கட்டுப்பாடுகளை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஜனவரி 1 ஆம் தேதி வெளியேறியபோது, இரண்டு நாடுகளுக்கும் மீன் பிடிப்பது தொடர்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த விதிமுறைகளை நாங்கள் சரியாகத்தான் பின்பற்றி வருகிறோம்.
அதன் பின்பு கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே அதனை பின்பற்றுவோம் என்று கூறிவிட்டது. இந்நிலையில் , பிரான்ஸ் பழிவாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அந்நாட்டின் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin கூறியுள்ளார்.
அதன்படி, பிரிட்டனுக்குரிய ஜெர்சி தீவிற்கு பிரான்சிலிருந்து தான் கடலுக்கடியில் கேபிள்கள் சென்றுகொண்டிருக்கிறது. எனவே அதன் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று Annick கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலை உருவானது கவலையளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.