ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரை அவருடைய மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் தோட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(35) என்பவருக்கு 35 வயது ஆகிவிட்டதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால் மைதிலி என்ற 20 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே மைதிலி 15 வயதில் திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து நந்தகுமாரை மைதிலி இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம் அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவர் உடனே போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர் .
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நந்தகுமாரின் மனைவியான மைத்திலியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மைதிலி தான் 35 வயதுடைய நபரை கல்யாணம் செய்ததுதான் பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளார். இது தாம்பத்தியத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் இதனால் நந்தகுமார் ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து தன் மனைவிக்கு ஏதோ மாத்திரை கொடுத்துள்ளார். இதனால் மைதிலியும் கர்ப்பமுற்று உள்ளார் .இதனை அடுத்து நந்தகுமார் மைதிலிக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கர்ப்பிணியான மைதிலி அவரை கொள்வதற்கு முடிவெடுத்துள்ளார்.
அதனால் சம்பவ நாளன்று மைதிலி பூச்சிக்கொல்லி மருந்தை நந்தா குமார் சாப்பிடும் சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார் .ஒருவேளை காலை சாப்பாட்டில் அவர் உயிர் போகவில்லை என்றால் மதியம் சாப்பாட்டிலும் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.இதனை சாப்பிட்ட நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.