அல்ஜீரியாவை சேர்ந்த 73 வயதுள்ள பாட்டிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அடுத்தடுத்த பரிசோதனைகளை செய்தனர். அதில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாகி இரண்டு கிலோ எடை கொண்டதாக மாறி உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ உலகில் இந்த கரு லித்தோபிடியன் என்று கூறுவார்கள். இந்த கரு கருமுட்டையில் உருவாகாமல் அடி வயிற்றில் உருவாகும். ஆனால் இந்த கரு உருவான ஓரிரு நாட்களில் தானாகவே வெளியேறிவிடும்.
அப்படி இல்லையென்றால் அடிவயிற்றில் ஏதாவது ஒரு பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும். இதுவரை 790 பேருக்கு இந்த கரு உருவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் முன்பு பாட்டியின் வயிற்றுக்குள் சென்ற கரு அங்கிருந்து வெளியேற முடியாமல் 7 மாதம் வளர்ந்த பிறகு வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது. மேலும் குழந்தை கரு முட்டையில் இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாய் சரியாக வந்துள்ளது. ஆனால் உடல் எடை மட்டும் அதிகரித்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக உடல் எடை அதிகரித்து உள்ளது என்று அவர் நினைத்தார். தற்போது தான் குழந்தை என்று தெரியவந்து உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.