Categories
ஆன்மிகம் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 ஆண்டுகளுக்கு கழித்து….. சிறப்பாக நடைபெற்ற தேர் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டலத்தில் புகழ்பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டும், யாக வேள்விகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Categories

Tech |