ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் துஷா மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் அந்தப் பெண் ஊருக்கு சென்றார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்தப் பெண் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த சில நபர்கள், நாங்கள் இந்த வழியாகத்தான் செல்கிறோம் உங்களுக்குத் தருகிறோம் என்று கூறி உள்ளனர். அதனை நம்பிய அந்த பெண்ணும் காரில் ஏறினார். ஆனால் அந்த மர்ம கும்பல் காரை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டி சென்றனர். இதையடுத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன் பிறகு அந்தப் பெண்ணை கொன்று உடலை அருகே இருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் காரில் வந்த கும்பலில் ஒருவனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். லிப்ட் கொடுப்பது போல பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.