பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கடந்த 35 வருடங்களாக தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதன் பிறகு அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்