நமக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொருள் தொலைந்து விட்டால் அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் தொலைந்து போன பொருள் கிடைத்துவிட்டால் அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அண்ட் ஹென்றி என்ற 90 வயது மூதாட்டி கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ஒரு ஞாபகத்தை தொலைத்துவிடுகிறார். அதாவது திருமணத்தன்று அவருடைய கணவர் அணிவித்த மோதிரத்தை தொலைத்து விடுகிறார்.
அந்த மோதிரம் தற்போது 35 வருடங்களுக்கு பிறகு அவருடைய வீட்டின் பேஸ்மென்ட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது கிடைத்துள்ளது. அந்த மோதிரம் கிடைத்ததால் மூதாட்டி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும் ஆண்ட் ஹென்றியின் கணவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அவர் இறந்து விட்டாலும் கூட 35 வருடங்கள் கழித்து திருமண மோதிரம் கிடைத்தால் தன்னுடைய காதல் இன்னும் அழியாமல் அப்படியே இருக்கிறது என அந்தப் பெண்மணி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.