Categories
உலக செய்திகள்

35.14 கோடியை தாண்டியாச்சு …. தீவிர தடுப்பு நடவடிக்கை …. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!!

அமெரிக்க நாட்டில் 35.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோன வைரஸ் தொற்று  பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது .இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதோடு கொரோனா  வைரசால் அதிக அளவு பாதிப்பையும் ,உயிரிழப்பையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு அந்நாட்டில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின்  பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும்  மாடர்னா,  ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

அதன்படி இதுவரை  35,14,00,930  டோஸ் தடுப்பூசிகள்  பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியான தகவலின்படி இதுவரை 35,06,27,188 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .இதில் 19,48,66,738 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் , 16,64,77,481 பேர்  2 டோஸ் தடுப்பூசியும்  போட்டுக் கொண்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |