Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உயர் அதிகாரி உட்பட 35 சீன வீரர்கள் பலி – அமெரிக்க உளவுத்துறை தகவல் ..!!

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட நிலையில் இரு நாட்டு எல்லையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சீனாவில் எவ்வளவு பேர் உயிரிழந்தார் என்று இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியிட வில்லை. ஆனாலும் அதிகாரிகள் தரப்பில்  லடாக் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் சீன தரப்பில் அதிக ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெச்சர்கள் மூலம் ஏராளமான சீன வீரர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சீன ஹெலிகாப்டர்களும் அதிகமாக இருந்ததால் அதிக சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம், காயம் அடைந்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

United States Intelligence Community - Wikipedia

இந்த நிலையில் தான் லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.சீனாவை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் உட்பட 35 வீரர்கள் பலியாகியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Categories

Tech |