Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,861 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 1,797 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 848 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 928ல் இருந்து 992 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |