350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது சிறுமியின் முகத்திலும் கழுத்திலும் மிகவும் கடுமையாக குத்தப்பட்டு இருந்தது. அதோடு உயிரிழந்த சிறுமியின் உடலில் கத்தியால் சில வார்த்தைகளும் கீரி வைக்கப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகள் பற்றிய தகவல்களை இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.
பின்னர் மயமான 14 வயது சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடியதில் அருகிலிருந்த மற்றொரு பண்ணையில் அவர் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது உறவினரான 10 வயது சிறுமியை அவர் தான் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 10 வயது சிறுமி தனது விடுமுறை நாட்களை கழிக்க 350 கிலோ மீட்டர் பயணம் செய்து உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதற்காக 14 வயது சிறுமி தனது உறவினரான 10 வயது சிறுமியை கொலை செய்தார் என்பது தெரியவரவில்லை . ஒரு குடும்பம் மகளின் மரணத்தை நினைத்தும் மற்றொரு குடும்பம் குற்றவாளியான மகளை நினைத்தும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.