Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும் – பேரவையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகள்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை,

  • ரூ. 9.66 கோடியில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும்.
  • 96 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 305 பண்டக சாலை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தரப்படும்.
  • ரூ. 27 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டி தரப்படும்.
  • 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ. 14 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் 189 அம்மா சிறப்பு அங்காடிகள் புதிதாக துவங்கப்படும்.
  • தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 60 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் .
  • உயர்கல்வித்துறை சார்பில், 7 புதிய கலை, அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படும்.
  • காஞ்சிபுரத்தில் ரூ. 17 கோடி மதிப்பில் மீன் இறக்கு தளம் அமைக்கப்படும்.
  • 50 அரசு நடு நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 50 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் .

Categories

Tech |