Categories
ஆட்டோ மொபைல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

25 நிமிடத்தில் 350km “உலக சாதனை படைத்த சென்னை இளைஞர்கள் “

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Image result for hyper loop technology

ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக  கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட   இந்த குழு ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிவேக வாகனத்தின் மாதிரியை அறிமுகப்படுத்தினர்.

இந்த குழுவானது  அடுத்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்த மாதிரி வடிவத்துடன் கலந்து கொள்ள இருக்கிறது . இந்த வாகனத்தின் சிறப்பே அதன் அதி வேகம் தான் உதாரணமாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு சுமார் 5 மணி முதல் 6 மணி நேரம் ஆகும் .ஆனால் இந்த ஹைபர் லூப் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் வாகனமானது வெறும் 25 நிமிடத்தில் சென்றுவிடும் என்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |