Categories
உலக செய்திகள்

36-39℃ வரை உயரும் வெப்பநிலை… பிரபல நாட்டில் விடுக்கப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் ஆம்பர் எச்சரிக்கை ஐந்து பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு பிரான்சில் உள்ள Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Drome, Var, Ardeche உள்ளிட்ட பகுதிகளில் 36-39℃ வரை வெப்பநிலை எட்டும் எனவும், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள், சிறுபிள்ளைகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தண்ணீர் போதுமான அளவு எடுத்துக் கொள்வதுடன், வெளியில் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐந்து பகுதிகளைப் போலவே Aude, Herault , Pyrenees-Orientales, Vaucluse, Corsica, Isere , Hautes-Alpes, Rhone, Haute-Loire, Lozere, Gard, Bouches-du-Rhone உள்ளிட்ட பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |