கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர் பூனைக்கு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வருவது ஆச்சர்யதி ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக இருப்பார்கள் என்றும், பணத்தை வைத்து நினைத்ததை வாங்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். அவ்வாறு பணம் என்பது ஒரு முக்கியமான தேவையான பொருளாக மாறி வருகிறது. ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்ற கவலை இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கு இது ஏன் செலவு செய்கிறோம்? என்ற கவலை ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இந்நிலையில் கோடீஸ்வர தொழிலதிபர் பெண் ஒருவர் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக வாழ மாட்டார்கள் என்று நிரூபித்து நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் சுமார் 36 கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். இந்நிலையில் இந்த பெண் தன்னுடைய உணவிற்கு செலவிடப்படும் தொகையை குறைப்பதற்காக தன்னுடைய வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு வருகிறார். இவ்வாறு இவ்வளவு பணம் இருந்தும் பூனைகளுக்கு கொடுக்கப்படும் உணவை சாப்பிடுவது இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா? என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.