அனுமதியின்றி கோவில் தேர் திருவிழாவை நடத்திய 36 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பாக 10 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் தேரோட்டம் திருவிழா தற்போது நடைபெற்றுள்ளது. இதன் முன்பாக மங்கள வாத்தியம் இசைக்க வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் வடம்பிடித்து தேரை இழுத்துள்ளனர்.
இதனை அடுத்து முக்கியமான வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை தேர் வந்தடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா காலத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் தேர் திருவிழாவை நடத்திய ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி உள்பட 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.