சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கையில் மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கடந்த சில நாட்கள் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.