36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முகத்தில் படிந்த கண்ணாடி தூள் தற்போது அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த 56 வயதான முதியவர் ஆர்சி சுப்பிரமணியன் என்பவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்ணின் கீழ் வீக்கமும், வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர் டாக்டரை அணுகி உள்ளார். அவர் ஏதாவது விபத்து நடந்ததா? என்று கேட்டுள்ளார். இல்லை என்று அந்த முதியவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர் அவரை பரிசோதித்து வீக்கமோ கட்டியோ இருக்கும் என்று எண்ணி மருந்து கொடுத்துள்ளார். ஆனால் முதியவருக்கு வலி குணமாகவில்லை.
பின்னர் மீண்டும் மருத்துவரை அணுகியுள்ளார். பின்னர் மருத்துவர் ஸ்கேன் செய்ய முடிவு செய்தார். அப்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. கண்ணுக்கு கீழ் கண்ணாடி துகள் ஒன்று சிக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து அந்த கண்ணாடிகளை வெளியில் எடுத்தனர். அப்போதும் அவரிடம் இந்த கண்ணாடித் தூள் எப்படி வந்தது என்று கேட்டபோது தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் அந்த கண்ணாடிகளை ஆய்விற்கு அனுப்பி பரிசோதனை செய்தபோது 36 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
பின்னர் மீண்டும் அவரிடம் கேட்டபோது தனக்கு இருபது வயது இருக்கும் பொழுது ஒரு ஆக்சிடெண்ட் நடந்ததாகவும், அதில் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து துண்டுகளில் முகத்தில் முழுவதும் பதிந்திருந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று பூரண குணமாகி வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் ஒரு கண்ணாடி துகள், அவர் முகத்தில் இருந்தது அவருக்கு தெரியாமல் இருந்து வந்தது.
பொதுவாக இப்படி விபத்து நடந்த கண்ணாடிதுகள் உடலில் இருந்தால் ஆறு மாதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளில் வலி, வீக்கம் ஏற்படும். ஆனால் இவருக்கு 36 ஆண்டுகள் இருந்தும் ஒன்றும் ஆகாமல் இருந்தது, டாக்டர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மருத்துவ உலகில் இது போன்ற சம்பவங்கள் அரிதாகத்தான் நடக்கும் என்று மருத்துவர் தெரிவித்தார்.