தன்னை ஏமாற்றிய சென்ற கணவர் மீது 36 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மனைவி வழக்கு பதிவு செய்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் 65 வயதான இளவரசி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 19 வயது இருக்கும் போது விஜய கோபாலன் என்பவரை கடந்த 1975-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இளவரசி கர்ப்பமாக இருக்கும் போது வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்ற விஜய கோபாலன் திரும்பி வராததால் இளவரசி தனது பெண் குழந்தையுடன் 10 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பிறகு விஜய கோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், காவல்துறையில் வேலை பார்த்து வருவதும் கடந்த 1985-ஆம் ஆண்டு இளவரசிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த இளவரசி விஜயபாலன் மீது புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி நடத்தப்பட்ட டி.ஏன்.ஏ பரிசோதனையில் விஜய கோபாலன் தான் இளவரசியின் பெண் குழந்தைக்கு அப்பா என்பது கடந்த 2020-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இளவரசி மீண்டும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற விஜய கோபாலனுக்கு 72 வயதாகிறது. சுமார் 36 வருடங்கள் கழித்து தன்னை ஏமாற்றிய விஜய் கோபாலன் மீது தனியாக குழந்தையுடன் பரிதவித்த இளவரசி வழக்கு பதிவு செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.