Categories
மாநில செய்திகள்

36,000 சதுர அடியில் பிரம்மாண்ட அரங்கம்….. தீவிரமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்….!!!!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

36 ஆயிரம் சதுர அடியில் இரும்பு சீட்டுகளால் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு சிறப்பு ஏற்பாடு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது. தரை முழுவதும் ஒரு அடிக்கு உயரமான மரப்பலகைகளால் தளம் அமைக்கப்பட்டு, மின்விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |