சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரிய ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக 11, 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மாணவிகளின் வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் போனில் உள்ள தகவல்களை நீக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.