உடுவனிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் 37,000 அடி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இறங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கினர்.
அதனால் விமானம் அபாமா விமான நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தில் இருந்த விமானங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்காததால் சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்தது. அதன் பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் இருவரும் விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.