Categories
உலக செய்திகள்

“37 நாட்களில்” ஒரே பெண்ணை 4 முறை திருமணம்…. 3 முறை விவாகரத்து…. விசாரணையில் அதிர்ச்சி…!!!

தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக எட்டு நாட்கள் விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களில் திருமணம் செய்த அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இப்படி இவர் 37 நாட்களில் மட்டும் நான்கு முறை திருமணத்திற்கு விடுப்பு கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. அப்போது அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதற்காக திருமணம் செய்த ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு விண்ணப்பம் ரத்து செய்து மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |