Categories
உலக செய்திகள்

“37 வருடத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி”… கிரீன்பேக்குடன் ஒப்பிடும்போது பிரித்தானிய நாணயம் 20 %க்கு மேல் இழப்பு…!!!!!!

அமெரிக்காவின் டாலருக்கு எதிரான பிரத்தானியாவின் பவுண்டு மதிப்பு 37 வருடங்கள் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் லிஸ்ட்ரஸ் மற்றும் நாட்டின் chancellor குவாசி குவார்டெங் இணைந்து பிரித்தானியாவின் மிகப்பெரிய வரைகுறிப்பு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையே பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த திட்டமிடுவதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சூழலில் திங்கட்கிழமை தொடக்கத்தில் பிரிட்டானியாவின் பவுண்டு மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது அதன் கீழ்நோக்கிய போக்கில் தொடர்ந்து சென்று ஐந்து சதவீதம் வரை சரிந்து$1.08க்கும் கீழே உள்ள நிலையில் எட்டி இருக்கிறது. அத்துடன் பிரித்தானிய பவுண்ட் 37 வருடங்கள் இல்லாத குறைந்த நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உலக அளவில் உள்ள புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்து இருக்கின்ற நிலையில் டாலருக்கு நிகரான பவுண்டு மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. வருடத்தின் தொடக்கத்தில் இருந்து கிரீன் பாக்குடன் ஒப்பிடும்போது பிரித்தானிய நாணயம் 20% க்கும் மேல் இழந்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கியின் சர்வதேச பொருளாதார தலைவர் ஜோசப் கபூர் சோ பிரித்தானியாவின் மோசமான நிலைமை அமெரிக்காவின் டாலருக்கான ஆதரவை அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |