உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 53 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 லட்சத்து 56 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:
உலக நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 12.38 லட்சம்,
ஸ்பெயின் – 2.53 லட்சம்,
இத்தாலி – 2.13 லட்சம்,
பிரிட்டன் – 1.94 லட்சம்,
பிரான்ஸ் – 1.70 லட்சம்,
ஜெர்மனி – 1.65 லட்சம்,
ரஷ்யா – 1.63 லட்சம்.
உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை :
அமெரிக்கா – 72,285 பேர்,
ஸ்பெயின் – 25,857 பேர்
இத்தாலி – 29,315 பேர்,
பிரிட்டன் – 29,427 பேர்,
பிரான்ஸ் – 25,531 பேர்,
ஜெர்மனி – 6,993 பேர்,
ரஷ்யா – 1,537 பேர்.
உலக நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 2 லட்சம்,
ஸ்பெயின் – 1.5 லட்சம்,
இத்தாலி – 85,231 பேர்,
பிரான்ஸ் – 52,736 பேர்,
ஜெர்மனி – 1.3 லட்சம்,
ரஷ்யா – 21,327 பேர்.