Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 37 கோடி பேரா….? உலகில் மொத்த கொரோனா பாதிப்பு….!!!

உலக நாடுகளில் மொத்தமாக 37.28 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தற்போது கொரோனா பல வகைகளில் உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா ஒவ்வொரு நாடுகளிலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அதிகமான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் தொற்றின் வீரியம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 37.30 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை 56.76 லட்சம் மக்கள் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். மேலும் தற்போது வரை 29.46 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்திருக்கிறார்கள்.

Categories

Tech |