Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

37 நாட்களுக்கு பின்….! ”ஈரோட்டில் கொரோனா” சோகத்தில் மக்கள் ….!!

37 நாட்களுக்கு பின்பு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் மட்டும் 70 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் . மற்ற 69  பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 37  தினங்களாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது.

இதனால் பல்வேறு தளர்வுகள் ஈரோடு மாவட்டத்திற்கு கொடுத்து வந்த நிலையில் 37 நாட்களுக்கு பின்பு இன்று ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை  சேர்ந்த ஒருவருக்கு எலும்பு அறுவை சிகிச்சை நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சேலத்துக்கு சென்றிருக்கிறார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி  செய்யப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |