அப்ரிடி சச்சின் கொடுத்த பேட்டில் தான் சதமடித்தார் என பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர்கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த சாகித் அப்ரிடி பரபரப்பான சம்பவத்தை நிகழ்த்தினார் . அது தனது இரண்டாவது சர்வதேச ஆட்டத்தில் வெறும் 37 பந்துகளில் சதமடித்த சாதனைதான் அவருக்குப் பிறகு 36 பந்துகளில் மற்றும் 31 பந்துகளில் சதம் அடிக்க பட்டிருந்தாலும் அப்ரிடியின் இந்த சதம் பெருமளவு பேசப்பட்டது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது அப்ரிடியின் அதிவேக சதம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் “அப்ரிடி 1996 ஆம் ஆண்டு நைரோபியில் அறிமுகமானார். முஷ்டாக் அகமதுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக அப்ரிடி அணியில் இணைந்தார். வாசிம் அக்ரம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என கூறினார்.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கலுவிதரனாவும், ஜெயாசூர்யாவும் அதிரடியாக விளையாடுவதால் நாங்களும் அதே போல் விளையாட முடிவெடுத்தோம். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரராக ஆப்ரிடி களமிறங்குவார் என கூறப்பட்டது. வக்கார் யூனுஸ் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து ஒரு பேட்டை பெற்றிருந்தார். அந்த பேட்டை வைத்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார் அப்ரிடி. நன்கு பேக்கிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளராக அறிமுகமான அப்ரிடிக்கு அதன்பின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை அமைந்தது” எனக் கூறியுள்ளார்.