Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”370 சட்டப்பிரிவு இரத்து” 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு ….!!

370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து வந்த நிலையில் , 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதில் 370-வது சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்ட  வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் விசாரிக்கும் , 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Categories

Tech |