Categories
உலக செய்திகள்

37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்…. நடுவானில் பெண் செய்த செயல்…. பகீர் காரணம்…..!!!!!

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென செய்த செய்கையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த 34 வயதான பெண் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனைப் பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் பணி பெண்களை தள்ளிவிட்டு கொண்டு விமானத்தின் கதவை இழுக்க முற்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணி ஒருவர் அவர் கதவை திறக்க முயல்கிறார் என்று கூச்சலிட்டு தடுக்க முயன்றார். அப்போது அந்தப் பெண் தனது தலையை விமானத்தின் தரையில் தாமாகவே அடித்துக் கொண்டுள்ளார். இதனால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை விமானத்தில் இருந்து வெளியேற்றி அதிகாரிகள் விசாரிக்கையில், கடவுள் தான் தன்னிடம் கதவை திறக்க சொன்னதாக அந்த பெண் கூறியுள்ளார். மேலும் அவர் கடித்ததால் காயமான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |