Categories
மாநில செய்திகள்

372 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள்…. இடித்துவிட்டு புதிய கட்டிடம்…. அமைச்சர் மூர்த்தி தகவல்…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் 372 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |