Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை மில்லியனா….? பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்த நாடு…!!!

பிலிப்பைன்ஸிற்கு சுமார் 375 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பிரமோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் வகை ஏவுகணைகள், போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடியது. உலகிலேயே அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை தான் இந்த பிரம்மோஸ். மேலும், பிரம்மோஸ், ஒலியை காட்டிலும் சுமார் மூன்று மடங்கு அதிக வேகத்துடன் சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அரசு, சுமார் 375 மில்லியன் டாலர்கள் கொடுத்து இந்த பிரம்மோஸ் வகை ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |