Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், 134 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள் மற்றும் 32 இலகுரக வாகனங்கள் என 178 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் குறையாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு 37வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை குறைத்த பாடில்லை. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா பாதிப்பு இன்னும் குறையாததால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Categories

Tech |