திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் உறுப்பினரான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த தருணம் வரை, திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அவர்களில் 21 பேர் நேரடியாகவே எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
இதனால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாக பிரிந்து, தற்போது பா.ஜ.க. கூட்டணியுடன் ஆட்சி நடந்து வருவது போன்ற சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.