தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் டோஸ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் ஸ்ரீகாந்த் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மன் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சந்திரா லக்ஷ்மன் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.
ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஸ் கிரிஸ்டியை காதலிப்பதாக தெரிவித்த அவரின் திருமணம் கேரளாவில் நடந்தது இதனையடுத்து இருவருக்கும் திரைஉலகினரும், ரசிகர்களும், வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.