Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றை மாத குழந்தை உட்பட 38 பேர் டிஸ்சார்ஜ்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குணமடைந்தவர்களுக்கு பழங்களை கொடுத்து கைதட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 174 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனவள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 114 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |