38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று 3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்.
ஆட்சி போய்விடுமென்று என்று அவர் கனவு கண்டுக் கொண்டு இருக்கின்றார்.திமுக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஜெயிச்சாங்க. வெற்றி பெற்ற 38 பேரை வைத்து என்ன பிரயோஜனம். 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று அமைச்சர் கருப்பணன் விமர்சித்துள்ளார்.