தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்து பணி நியமனமும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 380 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 110 விதியின் கீழ் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.