Categories
தேசிய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக….. ரூ. 3,800 கோடி நிதி திரட்ட திட்டம்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் அமைக்கப்படும் பணிகளுக்கு உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1500 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் பத்திரங்கள் 24 வருடத்தில் முடிவடையும் நிலையில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

இதனால் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்யவும் முடியும். இதுவரை வெளிநாடுகளில் இருந்து 8000 கோடிக்கு மேல் திரட்டப்பட்ட நிலையில், மேற்கொண்டு 3800 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உள்கட்டமைப்பு நிதியம் மூலம் திரட்டப்படும் பணத்தை பரஸ்பர நிதி போன்று உருவாக்கி, முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வாங்கி அதை முதலீடு செய்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு பணத்தை திரும்பவும் கொடுக்க முடியும்.

சர்வதேச அளவில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால், நாட்டின் வளர்ச்சியில் சாலைகள் அமைப்பது மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதோடு அனைத்து விதமான சூழ்நிலைக்கு ஏற்ப ஆன்மீக தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருவதற்கும் வசதியாக சாலைகள் அமைக்கப்படும். மேலும் போக்குவரத்துக்கான செலவை குறைப்பதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றார்.

Categories

Tech |