Categories
மாநில செய்திகள்

381 கோடியில் உணவுப்பூங்கா…. எங்கெல்லாம் தெரியுமா?…. பட்ஜெட்டில் வெளியான தகவல்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூபாய் 381 கோடியில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும். டிஜிட்டல் விவசாய திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்படும். நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மண் வள அட்டைகளுக்கான தமிழ் மண் வளம் இணைய முகப்பு உருவாக்கப்படும்.

Categories

Tech |