சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் அளித்துள்ளனர்.
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை அம்மா மாளிகையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும்,
சென்னையில் இதுவரை 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, 3,47,380 நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கிவரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும். 2 லட்சம் பேர்களுக்கு ஓமியோபதி மருந்து கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர். சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி, கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.