Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வீதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….

விதிகளை மீறிய 3825 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய தீவிர வாகன சோதனையில் தலைக்கவசம் அணியாமலும், குடிபோதையிலும், சீருடை அணியாமலும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீதும், முகக் கவசம் இல்லாமல் இருப்பது உள்பட பல்வேறு விதிகளை மீறியதாக 3825 வாகன ஓட்டிகளின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |