தற்போது தமிழக அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று மொத்தமாக 38,926 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4300 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாடு முழுவதும்: 38,926 காலிப்பணியிடங்கள்
பணி: Gramin Dak Sevaks
தமிழகத்தில் : 4310 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது
ஊதிய தொகை: Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC
தேர்வு முறை: 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம்: SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
https://indiapostgdsonline.gov.in/
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf