Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மர்மநபர்கள் இப்படி பண்ணிட்டாங்க…. மளமளவென பரவியது…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தெற்குபட்டில் மது குடித்துவிட்டு மர்மநபர்கள் வயல்வெளிகளில் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை, தெற்குபட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் 100 ஏக்கர் வயல்வெளி விளைநிலங்கள் இருக்கின்றது. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் பயிரிடாமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் என வளர்ந்து காடுபோல் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மதுபானங்களை குடித்துவிட்டு விளைநிலங்களில் தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் தீ வயல்வெளிகளில் மளமளவென பரவி 60 ஏக்கர் காலி நிலம் 1 கிலோமீட்டர் தொலை அளவிற்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், சிறுசேரி, பகுதியிலுள்ள தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயினை அணைப்பதற்குமுயற்சி செய்துள்ளனர். ஆனாலும் வயல்வெளிகளில் எரிந்த தீயினை அணைப்பத்ற்கு முடியாமல் தீயணைப்புத்துறை வீரர்கள் தவித்து வந்துள்ளனர். இந்த தீ விபத்தால் திருவிடந்தை, தெற்குபட்டு கிராமம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |