Categories
தேசிய செய்திகள்

39 ஆயிரம் கேம் ஆப்கள் ஒரே நாளில் க்ளோஸ்… ஆப்பிள் நிறுவனம் அதிரடி…!!!

மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 39 ஆயிரம் கேம் ஆப்களை நீட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது பிளேஸ்டோரில் உரிமம் இல்லாத கேம்ஸ் மீது உள்ள ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக சீனா ஆப் ஸ்டோரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 39 ஆயிரம் கேமிங் ஆப்களை அதிரடியாக நீக்கியது. ஆப்பிள் நிறுவனம் சீன ஆப் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து உரிமங்களை பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயித்து மற்றும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான ஆப் அவற்று வது இதுவே முதல் முறை. மொத்தம் 39 ஆயிரம் கேம்கள் உட்பட, ஆப்பிள் நிறுவனம் மொத்தமாக 46 ஆயிரம் ஆப்களை நீக்கியுள்ளது.

மேலும் கிமாய் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, ஸ்வீப்பால் பாதிக்கப்பட்டுள்ள சில ஆப்களில் Ubisoft- இன் NBA2K20 மற்றும் Assassin’s Creed Identity ஆகியவைகளும் உள்ளடங்கும். அதுமட்டுமன்றி இந்த அறிக்கை சீன ஆப் ஸ்டோரின் மிகவும் பிரபலமடைந்த 1500 பெயிண்ட் ஆப்களில் 74 ஆப் மட்டுமே தூய்மைபடுத்துதலில் இருந்து தப்பித்து உள்ளது. அவை அகற்றப்படும் அதற்கான காரணம், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் கொள்கைகளை நிறைவேற்றியது தான்.

Categories

Tech |