Categories
கிரிக்கெட் விளையாட்டு

39 -ஆவது பிறந்தநாளை காணும் எம்.எஸ்.தோனி – கவுரவப்படுத்திய பி.சி.சி.ஐ…!!

கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 39 – ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். பெஸ்ட் பினிஷெர் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் எம்.எஸ்.தோணி அழைக்கப்படுகிறார்.

இந்தியாவுக்கு 3 வித உலகக் கோப்பைகளை பெற்றுத்தந்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி தான். களத்தில் எப்போதும் பதற்றமின்றி காணப்படும் இவர் எதிராணிகளுக்கு எதிரான திட்டங்களை வகுப்பதில் கைத்தேர்ந்தவர். எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளையொட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரை கவுரவப்படுத்தியது.

Categories

Tech |