Categories
தேசிய செய்திகள்

39 வயசு ஆச்சு… ஆனா இன்னும் கல்யாணம் ஆகல… விரக்தியில் இருந்த இளைஞனின் விபரீத முடிவு…!!!

39 வயதாகி தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வருகிறார். அவர் தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி செய்தார். பின்னர் அன்று இரவு தனது சகோதரிக்கு செல்போன் மூலம் அழைத்த சாரி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவரது சகோதரி அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றிருக்கிறார். மேலும் வீட்டின் உரிமையாளரை அழைத்து தனது தம்பி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. 39 வயதாகியும் இன்னும் கணக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவரது சகோதரியிடம் கூறியதையும், அவரது சகோதரி கூறிய வாக்குமூலத்தையும் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |