Categories
சினிமா தமிழ் சினிமா

39 வயதில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகை…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

பிரபல சீரியல் நடிகை கர்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவர் மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சந்திரா மிகவும் பிரபலமானார். அதன் பின் கோலங்கள், சொந்த பந்தம், மகள், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/ChzKjwvp7kD/?utm_source=ig_embed&ig_rid=699753c5-490a-4b6b-bef1-e0d3132b0dcc&ig_mid=148035A9-5FAF-4463-8AD2-78E794C1F4D6

இவர் கடந்த வருடம் டோஸ் கிருஷ்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 39 வயதாகும் சந்திரா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சந்திராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |