Categories
தேசிய செய்திகள்

39,00,000 பேருக்கு…. ரூ65,000கோடி ஒதுக்கீடு…மோடிஜியின் சாதனை திட்டம்..!!

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த புதியதாக வடிவமைக்கப்பட்ட ஏவிபிஇன்ஜெய் என்ற இணையதளத்தை தொடங்கியதாக  தெரிவித்தார்.

Related image

மேலும் இத்திட்டத்தின் மூலம் 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சைக்காக 6500 கோடி ரூபாய் நிதியை அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏழை நடுத்தர குடும்பங்களுக்காக சுமார் 12,000 கோடி ரூபாய் நிதி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு தெரிவித்தார். இனி ஆண்டுதோறும்  செப்டம்பர் 23ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் தினமாக கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |